கிளிநொச்சியில் பதற்றம் - குடியிருப்பு கொட்டகைகளை அகற்ற முயற்சி

கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் அங்கு தமது குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை அமைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அகற்ற முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்” என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.