புத்தளத்தில் மான்குட்டி ஒன்றை இறைச்சிக்காக வெட்டியவர் கைது

ஆர்.ரஸ்மின், சாஹிப்
புத்தளம் கல்குளம் பகுதியில் மான் குட்டியொன்றை ஒன்றை இறைச்சிக்காக வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை (10) கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் நபர் ஒருவர், மான் குட்டியொன்றை இறைச்சிக்காக அறுப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 16 கிலோ கிராம் எடையுள்ள மான் குட்டியும், அதனை அறுப்பதற்காக பயன்படுத்திய கத்தியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம், கல்குளம் பகுதியில் குறித்த மான்குட்டியானது வானகம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் இருந்ததாக ௯றப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சந்தேக நபர் அந்த மான் குட்டியை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீட்டின் பின்பக்கமாக மரமொன்றில் தொங்க விட்டு இறைச்சிக்காக அறுத்துள்ளார் எனவும் புத்தளம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதிப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வேலாயுதம் சிவலிங்கம் தெரிவித்தார்.


News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.