எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது - நாமல்


கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்து நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸாரை கொழும்புக்கு அழைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ கூறியுள்ளார். 

தற்போது இடம்பெற்றக் கொண்டிருக்கின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றுள்ள அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். 

பல சவால்களுக்கு மத்தியிலும் பாரிய மக்கள் வௌ்ளம் இன்று கொழும்புக்கு வந்துள்ளதாக அவர் கூறினார். 

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள் என்றும் மக்கள் வௌ்ளம் கொழும்புக்கு வருவதன் நோக்கத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளாார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.