விபத்தில் இறந்தவர் தனது கணவர் என்று தெரியாமல் சிகிச்சையளித்த தாதி

விபத்தில் இறந்தவர் தனது கணவர் என்று தெரியாமல் தாதி ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனுடைய மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த சீனிவாசன் விபத்துக்குள்ளானார்.
அவர் ஓமலூர் அச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சீனிவாசனுக்கு மருத்துவர்கள் மற்றும் தாதி சிவகாமி சிகிச்சையளித்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முகம் அதிகமான குருதியில் மறைந்திருந்ததால், அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை.
நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என சிவகாமி அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலைக் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.