ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்குள் ஏற்பட்ட மார்க்க மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் காரனமாக SLTJயில் செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட கிளைகள் ஒன்றிணைந்து சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) என்ற பெயரில் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளன.
கடந்த 23.09.2018 அன்று மடவளை சன்சைன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் விசேட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கிளை, மாவட்ட நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், தாஈக்கள் ஒன்றிணைந்தே இந்த புதிய அமைப்பை தோற்றுவித்தனர்.
புதிய அமைப்பின் நிர்வாகிகள் விபரம்
தேசிய தலைவர் - சகோ. ரிஸான் (தமன்கடுவ)
பொதுச் செயலாளர் - சகோ. அப்துர் ராசிக்
பொருளாலர் - சகோ. ரஜய்
துணை தலைவர் - சகோ. சில்மி ரசீதி
மறதுணை செயலாளர்கள் - சகோ. ரிஸான் (தர்காடவுன்)
சகோ. சஜாத் நத்வி
சகோ. ரஸ்மின் MISc
இப்புது நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களினால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்
சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின் (CTJ) தலைமையகம் கொழும்பில் செயல்படும் என்றும் பொதுக்குழுவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஊடகப் பிரிவு : சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)
Post a Comment