மைத்திரி - ரணில் இடையே விரிசல் நிலை - ராஜாங்க அமைச்சர் அதிரடி

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இடையிலான சந்திப்ப பற்றிய செய்திகள் அரசியல் களத்தில் பாரிய நெருக்கடியை உண்டாக்கி வரும் இத்தருணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரிந்து நின்றே செயற்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து மென்மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஸ்ரீலங்கா மேலும் சுபீட்சம் காணும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றின் ஆசிரியர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு நேற்று லிந்துலை மெராயா யுனிவர்சல் பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
சமூக நோக்கை கொண்ட அபிவிருத்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுத்திவருகின்ற அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளுடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மாகாண சபைகள் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.