சொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.

த்­தனை வருட பொலிஸ் சேவையில் எனக்­கென சொத்­துக்­களை நான் சேர்க்­க­வில்லை. நல்ல மனி­தர்­க­ளையே சம்­பா­தித்­துள்ளேன்.  நீங்கள் நம்­பினால் நம்­புங்கள், எனக்­கென சொந்­த­மாக ஒரு வீடு­கூட இல்லை  என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கூறினார்.

பொலிஸ்மா அதி­ப­ருக்கு எதி­ராகப்  பல குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­படும் நிலை­யிலும், அவர் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்கள் குறித்தும் மனம் திறந்து பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.


“எனது 33 வருட பொலிஸ் சேவையில் எனக்­கென ஒரு கல் துண்டை கூட நான் சம்­பா­திக்­க­வில்லை. நான் சம்­பா­தித்­த­வை­யெல்லாம் மனி­தர்­களும், சுய­கெ­ள­ர­வமும், நல்ல பெயரும் மட்­டும்தான்.  இது என்னைத் தெரிந்­த­வர்­க­ளுக்குத் தெரியும்.  எனினும், தற்­போது எனக்கு தாயின் பாசமும், குடும்­பத்தின் அர­வ­ணைப்­புமே எஞ்­சி­யுள்­ளன.

சிலர் எனது தாயின் புகைப்­ப­டத்தை முகப் புத்­த­கத்தில் நிந்­திக்கும் வகையில் பதி­வேற்­று­கின்­றனர். தாயின் புகைப்­ப­டத்தை கழுத்துப் பகு­தியால் கத்­த­ரித்து வேறு முகங்­களை அதில் பதி­லீடு செய்து பதி­வேற்­று­கின்­றனர்.

என்னை ஏசி­னாலோ தூற்­றி­னாலோ நான் பொறுத்­துக்­கொள்வேன். எனினும் எனது தாயை நிந்­திப்­பதை என்னால் பொறுக்க முடி­ய­வில்லை என சற்றுக் கண் கலங்­கிய நிலையில் தெரி­வித்தார்.

நான் திருடன் இல்லை;  நான் மோச­டிக்­காரன் இல்லை;  நான் ஊழல்­வாதி இல்லை.  என்னை திரு­டனின் நிலைக்கு உள்­ளாக்­கிய பின்னர் நான் கட்­டிக்­காத்த சுய­கெ­ள­ர­வத்­துக்கு என்­னா­வது?   நீங்கள் நம்­பினால் நம்­புங்கள், இன்னும் எனக்­கென சொந்­த­மாக குடி­யி­ருக்க ஒரு வீடு­கூட இல்லை.  இனி வீடொன்றினை வாடகைக்கேனும் தேட வேண்டும். பிள்ளைகளுக்கேனும் இருக்க ஓர் இடம் வேண்டுமல்லவா? என உணர்ச்சி பொங்க மேலும் தெரிவித்தார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.