விசாரனையின் முடிவில் கருணைக்காட்டிய பொலிசார்:ஹொரவப்பத்தானையில் சம்பவம்.ஹொரவப்பத்தான புளியங்கடவள என்னும் பிரதேசத்தில் தந்தையொருவர் தனது அங்கவீனப்பிள்ளையுடன் மரத்தின்மேல் குடியிருந்து 500/ரூபா பணத்திற்கு தோட்டம் பார்க்கும் வேளையில் பல நாட்களாக இருந்துவருவதை ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எட்டியது.

அதனைத்தொடர்ந்து அவ்வதிகாரிகள் அத்தந்தையை அனுகி விசாரித்ததில் அவர் கூறியது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது அவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்ததால் தன் அங்கவீனப்பிள்ளையை தனியாகவிட்டுச்சென்று தொழில் செய்ய முடியாததால் தன் மகளைப்பார்த்துக்கொண்டு தோட்டம் பாதுகாக்கும் கடமையை செய்துவருவதாகக்கூறினார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் வறுமையில் இருக்கும் தந்தைக்கும்பிள்ளைக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்து உதவிகள் செய்து கொடுத்தனர், மேலும் அவர்களுக்கு வீட்டு வசதிகள் அமைத்துக்கொடுப்பதாகவும் ஹொரவப்பத்தான பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார்.

-ஹபீஸ் காசிம்-
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.