அன்புள்ள புத்தளத்து மண்ணிற்கு : காத்தாகுடியிலிருந்து ஓர் மடல்..


ப்பிட்ட மண்ணே எப்படி இருக்கிறாய்?
நலம் விசாரிக்க “நா”வரவில்லை
ஆனபோதும் நலம் விசாரிக்கிறேன் தப்பாக
எண்ணிவிடாதே, குப்பைகளால் குளிப்பாட்ட முனைகிறார்களாம் உன்னை என்றறிந்தே எழுதுகிறேன்.

தலைநகரை சுத்தமாக்க உங்க நகரை
அசுத்தமாக்கும் அரசாங்கத்தின்
அயோக்கியத்தனம் அறிந்தேன்,
ஆத்திரப்பட்டு எதுவும் செய்துவிட முடியா
நிலையில்  எவனோ இழைத்த தவறுகளை
என்மீது  பழி சுமத்தி எதையுமே செய்ய
முடியாமல் அடக்கிவாசிக்கும் படி
வைத்துவிட்டது இந்த அரசாங்கம்,
ஆதலாலேயே எழுதி தீர்க்கிறேன் இப்போதெல்லாம்.

சோகமாக இருக்கும் உனக்கு
ஆறுதலுக்கு ஓர் கதை சொல்கிறேன்

ஒரு நகரை அசுத்தமாக்கி தலைநகரை
சுத்தமாக்கும் இந்த அரசாங்கத்தின்
காவாளித்தனம் எனக்கு நினைவூட்டுவது..,
பாடசாலை காலத்தில் எனது வகுப்பறையை
கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து,  வரும்
குப்பை கழிவுகளை அடுத்த வகுப்பறையின்
நுழைவாயிலில் எவர் கண்ணிலும்
படாவண்ணம் ஒதுக்கி வைத்துவிடுவேன்,
பின்னர் அதிபர் வரை இந்த பிரச்சனை
எடுத்துச்செல்லப்பட்டு கடைசியில்
கள்ளனும் பிடிபட்டு(நான்) அந்த கட்டிட
தொகுதியில் இருக்கும் அனைத்து
வகுப்பறையும் ஒருசேர மொத்த
கட்டிடத்தையும் தினமும் கூட்டிப்பெருக்கி
சுத்தம் செய்தாகவேண்டும் என்றானது தீர்ப்பு

உங்க ஊரு உப்பு திண்டு வந்த ரோஷத்தால
அன்றோடு கைவிட்டேன் அந்த குப்பை
கொட்டுற வேலையை

ஆனால் நம் நாட்டு அதிபரோ குறுநில
மன்னன் 23ஆம் புலிகேசியின் ராஜதந்திர
கொள்கையை கொண்டவர் போல
மக்கள் படும் துயரங்களை பற்றிய சிந்தனை
துளியும் இன்றி அபாயா துணியில் ஆடை
அணிந்து அமெரிக்காவில்  சுற்றி திரிவதாக
அறிந்தேன், ஊருக்கெல்லாம் உப்பு
போட்ட நீங்க நம்ம ஜனாதிபதிக்கு
மட்டும் போடாமல் விட்டது தப்பா போச்சி.

மரத்தால விழுந்தவனை மாடு முட்டின
கதைபோல நாம் கொண்டுவந்த அரசாங்கம்
நமக்கே ஆப்படிப்பதை கண்டு
அடக்கிவாசிக்கவும் முடியாமல் ஆதங்கப்பட்டு
போராடவும் திராணியில்லாத நிலையில்
நான் இன்று.

பாவப்பட்ட புத்தளத்து மண்ணே ..
மரக்கறிவகை, தேங்காய், மீன், கருவாடு,
உப்பு என ஏகப்பட்ட உணவுகளை
இலங்கை தேசம் எங்கும்  வினியோகிக்கும்
உங்க மண்ணுக்கு இந்த அரசாங்கம்
இழைக்கும் துரோகச்செயல் இது ,

அனல் மின்சாரம், சீமெந்து தொழிற்சாலை
என இரண்டொரு துயரங்களை சுமந்து
கொண்டு தலைநகரத்து கழிவுகளையும்
சுமக்க தயாராகிவிட்டாய் என்ற செய்தி சற்று சளிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

உப்பிட்ட ஊருக்கே குப்பையை
கொட்டுவதென்பது நன்றி கெட்ட செயல்
என்பதை நாடே அறிந்தும் அமைதியாக
ஆமோதிக்கிறது என்பது இலேசாக வலிக்கிறது.

இது உனது ஜீவ மரணப் போராட்டம்.
உனது இருப்பு சார் நெருக்கடி.உன்னை
சிட்டி ரோபோக்கள் அழிக்கப் பார்க்கின்றன.
நீ மண்ணின் மைந்தர்களோடு கைகோர்த்துப் போராடு இல்லையெனில் அடுத்த
தலைமுறையை பற்றி இனி எவனும் பேச
வேண்டிய தேவையே இருக்காது , ஏன்னா அது இருக்காது .

இக் கடிதத்தை குணசிங்கபுரவில் உள்ள
குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறேன்,
எப்படியும் அடுத்த வாரமளவில்
புத்தளத்திற்கு வந்துவிடும் குப்பையுடன்,
முத்திரை வாங்க வைத்திருந்த பணத்தில்
ஒரு பிரிஸ்டல் போட் வாங்கி #கிளீன்புத்தளம்
என எழுதிவைத்துள்ளேன், தேவைப்படும்
தருணத்தில் களத்திற்கு வருவேன் தூக்கிக்கொண்டு.
.இன்ஷாஅழ்ழாஹ் .

Feroz mohamed
Kattankudi

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.