பெரும்பான்மையை நிரூபித்தால் அலரிமாளிகையை விட்டு வெளியேறுவோம் : பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பவர் சட்டத்தை மதிக்கும் ஒரு தலைவர் எனவும், பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் அலரிமாளிகையை விட்டும் உடன் வெளியேற அவர் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க இன்று காலை 8.00 மணியுடன்  ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையை விட்டும் வெளியேறுமாறு நேற்று (27) கூறியிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி என்பது முக்கியமான ஒரு கட்சி. ரணில் விக்ரமசிங்க என்பவர் சட்டத்தை மதிக்கும் ஒரு தலைவர். சட்டவிரோதமான முறையில் ஒரு பிரதமரை நியமித்தமைக்காக அலரி மாளிகையை விட்டும் செல்வதற்கு நாம் தயாரில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதவைப் பெரும் நபர் தான் பிரதமர். இந்த அதிகப் பெரும்பான்மை ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது. அலரிமாளிகையைப் பெறுவதற்கான அவசரம் உள்ளவர்கள் முடியுமானால், அவசரமாக பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். இதன்போது ரணிலுக்கு பெரும்பான்மை இல்லாவிடின் உடன் அலரிமாளிகையை விட்டும் வெளியேற தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.