Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

"ஒற்றுமை எனும் கயிற்றினை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்" எனும் அல்-குர்ஆன் வசனத்திற்கு தேர்தல் ஆனையாளர் தேசப்பிரிய விளக்கம்..

Published on Wednesday, October 3, 2018 | 2:05 PM

ந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் ஆணையாளர் கௌரவ மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு.

கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தின் 128ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும்,ஆசிரியர்களாக பணி புரிந்த ஓய்வு பெற்றவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கிடைக்கப்பெற்றமையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் ,ஆசிரியர் தொழிலை தான் நேசிப்பதாகவும்,சில வருடங்கள் தான் ஆசிரியர் சேவையை புரிந்துள்ளதாகவும் அதனால் இதுபோன்ற அதிபர் ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக தன்னை இவ்விழாவிற்கு அழைப்பு  விடுத்த உங்கள் ஊரின் மைந்தன் எமது தேர்தல் மேலதிகாரி உஸ்மான் அவர்களுக்கும் இந்த விழா கமிட்டியினருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் உள்ள அனைவரும்  சமாதானத்தையே விரும்புகின்றனர் என்றும் அனைத்து மதங்களிலும் அன்பையும் இரக்கத்தையும் தயாளத்தையும் ஒற்றுமையையுமே போதிக்கின்றன, என்றும் பௌத்த மதத்திலும் ஹிந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் அன்பையே போதித்துள்ளன.

அதேபோல் தான் இஸ்லாம் மார்க்கத்திலும் எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சொல்வதாகவும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ள பொருளை எடுத்து பார்த்தால் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன் என்றும் கூறுவதை பார்க்கும் போது இஸ்லாமும் அன்பையும் பரஸ்பரத்தையும் தயாளத்தையுமே வலியுறுத்தி நிற்கிறது என்றும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுமாறும் அல் குர்ஆனில் கூறப்படும் போதனை அன்பையும் பரஸ்பரத்தையும் சமாதானத்தையுமே போதிப்பதாகவும் விளக்கமாக கூறினார்.
18 வயதினை பூர்த்தி செய்த அனைத்து பிரஜைகளும் வாக்காளர் இடாப்பில் பெயர் பதிந்து கொள்வது அத்தியாவசியமாகும். வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தால் அவருக்கு வாக்குண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லை என்றால் அவருக்கு வாக்கில்லை எனவே இந்த நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமை வாக்குரிமை போன்ற உரிமைகளை பெற்றவர்களுக்கே இந்த நாடும் இந்த நாட்டுக்கு இந்த உரிமைகளை பெற்றவர்களும் சொந்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் வாக்களிக்க முடியாது,வாக்குரிமை உள்ளவர்கள் வாக்களிக்காமல் இருக்கவும் வேண்டாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களியுங்கள். ஆனால் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள்,வாக்களிப்பதற்கு தேர்தல் பிற்போடுவதும் ஏற்புடையல்ல ஆகவே மக்களின் உரிமையாகிய தேர்தலை வைப்பதே ஜனநாயக வழிமுறையாகும். தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற இரகசியங்களை நாம் பாதுகாப்போம் யாராலும் உங்கள் வாக்களிப்பை பார்க்க முடியாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.
என்று கூறி இப்பாடசாலை எதிர்காலத்தில் மேலும் கீர்த்தி நாமம் பெறக்கூடிய ஒரு பாடசாலையாக திகழ வேண்டும் எனக்கூறி எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி தனதுரையை முடித்து. 
தனது கரங்களால் பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களுக்கும்,மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மத் அவர்களுக்கும் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.
தொகுப்பு. 
எம்.ஆர். லுதுபுள்ளாஹ் 
கஹட்டோவிட.
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved