வன்னி மக்களின் வாழ்வியல் நடவடிக்கைகளை அறிந்துகொண்ட அம்பாரை ஊடகவியாலாளர்கள்.

ன்றைய நவீன உலகிலே பல நாடுகளின்,நாட்டுத்தலைவர்களின் அரசியல் ஆட்சியினை மாற்றி அமைக்கும் ஆச்சரியமாய்,அதிசய சக்தியாய் இன்றைய நவீனத்துவ ஊடகங்களும்,ஊடகவியலாளர்களும் சிறப்புற்று விளங்குவதை நோக்கக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் இலங்கை நாட்டினுடைய அரசியல் செயற்பாட்டிலும் அனைத்து வகையான உள்நாட்டு ஊடகங்களும் செல்வாக்குச் செலுத்துவதனையும் அறியமுடிகிறது.அதிலும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அரசியலில் அதிகம் பல திருப்புமுனைகளை  தோற்றுவித்திருப்பதையும் காணமுடிகின்றது.
ஊடகவியலாளர்கள் பணி உண்மையிலேயே ஊடக தர்மம் சார்ந்ததாக,நடுநிலையானதாக அமைதல் வேண்டும்.ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் உண்மையான செய்திகளை உடனுக்குடன் பிரசவிப்பதில் முன்னோடிகளாகவும்,நீதமான செய்தியாளர்களாகவும் திகழ வேண்டுமென்பதே ஊடகத்துறையின் கண்ணிய எதிர்பார்ப்பாகும்.
மாற்றமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளையும்,ஆக்கம்களையும்,கருத்துக்களையும் தங்களின் சுயலாப உழைப்புக்காக வெளியிடுகின்ற,ஊடகத்தின் மகிமையை சீர்குலைத்து சின்னாபின்னப்படுத்துகின்ற,வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு ஊடகப்பட்டம் வென்றவர்களாய் இன்று பல புதிதாய் முளைத்த உதாசீனமான எழுத்தாளர்களால் உயிரோட்டமான ஊடகத்தின் உன்னதம் உருக்குலைந்து,ஊடகத்தனித்துவம் தடம்புரள்வதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.
அந்தவகையில் ஊடகத்தின் உண்மையான கோட்பாடுகளையும்,சட்டதிட்டங்களையும்,ஊடக விழுமியங்களையும் சிறப்பாக நேசிக்கக்கூடிய,ஊடகத்தின் கண்ணியத்தை தொடர்ந்தும் பேணக்கூடிய ஊர்ஜிதமான செய்திகளை உரிய இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து உரியமுறையில் வெளியிடும் முதற்தரம்வாய்ந்த,சிறப்புவாய்ந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் குழுவொன்று அண்மையில் வடமாகாணத்தின் வன்னித்தேர்தல் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வமான கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக வவுனியா,மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய மக்களை சந்தித்து அவர்கள் கண்டுகொண்ட நன்மைகள்,எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தெட்டத்தெளிவாக கேட்டறிந்து கொண்டனர்.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்,மற்றும் ஏனைய இரு ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அடங்கலாக சுமார் (31) பேர் வவுனியா,மன்னார் மாவட்டங்களுக்கு  விஜயம் மேற்க்கொண்டு பல பிரதேசங்களுக்கும் சென்று அங்கு வாழும் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி பல அப்பட்டமான உண்மைகளையும்,அரசியல் அபிவிருத்திகளையும்,அமைச்சர் ரிசாட் மீதான அமோகமான வடபுலத்து மக்களின் ஆதரவலைகளையும் கண்டு கொண்டது மாத்திரமன்றி,வடபுலத்து மக்களின் இதயங்களில் ரிசாட் பதியுதீன்  என்னும் ஆளுமையான அரசியல்வாதி நிரந்தரமாய் குடியிருக்கும்  அந்த அற்புதமான உண்மை நிலையினை அங்கு சென்ற அத்தனை பேரும் திரையின்றிக் கண்டதோடு ஆழமாய் அறிந்தும் கொண்டனர்.
வவுனியா மாவட்ட சாளம்பைக்குளம்,புதிய சாளம்பைக்குளம்,முசலி,பாலைக்குழி,கொண்டச்சி,பொற்க்கேணி,அகத்திமுறிப்பு,சிங்களகம்மான,அளக்கட்டு,பேசாலை தமிழ்க்கிராமம், மற்றும் தலைமன்னார்துறை,தாராபுரம்,மன்னார் உப்புக்குளம்,சிறுதோப்பு,மாந்தை மேற்கு போன்ற இன்னும் பல இடங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களின் உதவியுடனும்,தன் சுய முயற்சியினாலும் பல சவால்களுக்கும்,எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தன்னினத்தின் நிம்மதிக்காய் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள ஏராளமான வீடமைப்புத்திட்டங்களையும்,பாடசாலைகளையும்,பள்ளிவாசல்களையும்,மதரசாக்களையும்,வைத்தியசாலைகளையும்,விளையாட்டு மைதானங்களையும்,பல பொதுக் கட்டடங்களையும்,தரமிக்க பாதைகளையும்,மின்சார வசதிகளையும்,வாழ்வாதார உதவிகளையும்,மற்றும் இன்னோரன்ன சேவைகளையும் கண்டுகொண்ட ஊடகவியலாளர்கள் அமைச்சர் ரிசாட்டின் எண்ணற்ற தன்னினத்தின் மீதான சேவைகளையும்,சேவையுணர்வையும்,மனித நேயத்தையும்,மக்கள் செல்வாக்கினையும் எண்ணி வியந்து போனார்கள் என்பதை அங்கு சென்ற எந்தவொரு ஊடகவியலாளனும் மறுதலிக்க முடியாத ஒன்றேயாகும்.
வடக்கில் செல்லும் திசையெங்கும் அமைச்சர் ரிசாட்டின் சேவைகள் படர்ந்திருப்பதை பார்க்கும் போது அப்பகுதி மக்கள் மாத்திரமல்ல எப்பகுதி மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தாமல் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை....
இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களை சொந்தக் கிராமங்களிலும்,ஏனைய இடங்களிலும் நீதியான முறையில் குடியமர்த்திய பெருமை அமைச்சர் ரிசாட் பதியுதீனையே சாரும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.தொடரும் அரசியலில் தொடர்ந்தும் எதிரிகளின் பலத்தை முறியடித்து தன்னினத்தின் விடிவுக்காய் அமைச்சர் பாடுபட வேண்டுமென்பதே அம்மக்களின் வேண்டுதலாக உள்ளதையும் உணர முடிந்தது.
அத்துடன் ‘’அமைச்சர் ரிசாட் தேகாரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்,அவர் செய்த சேவைகளுக்காய்  நாங்கள் நெஞ்சார நன்றி பாராட்டுகின்றோம்,அவரின் ஆரோக்கியமான ஆயுளுக்காகவும்,அரசியல் வெற்றிக்காகவும் என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்’’ என்று கணிசமான மக்கள் கூறிய விதம் இன்னும்,இன்றும் மனதிலே ஒலிக்கிறது...
வடக்கிலே அதிலும் வன்னியிலே அமைச்சர் ரிசாட் சேவை செய்யவில்லை என்று பொறுக்கமுடியாது பொய்ப்பிரச்சாரங்களை செய்து மக்களை திசை திருப்ப முயன்ற அநியாயக்கார அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் ரிசாட்டின் பாரபட்சமற்ற வடக்கின் அபிவிருத்திகளையும்,மங்காத சேவைகளையும்,மக்களின் அதீதமான செல்வாக்கினையும் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமையுடன் உணர்த்திய வடபுல முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்கள் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்களே.அதன் பிரதிபலிப்பாகவே பல பத்திரிகைகளிலும்,வானொலிகளிலும்,தொலைக்காட்சிகளிலும்,சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிட்ட கிழக்கு ஊடகவியலாளர்கள் அமைச்சர் ரிசாட் தொடர்பான உண்மை நிலவரங்களை இன்று வரை தைரியமாய் எடுத்துரைத்த,சமர்ப்பிக்கும் விதத்தினை எண்ணி மனச்சாட்சியுள்ள,மானசீகமான கிழக்கின் ஊடகவியலாளர்கள் எனும் உயரிய அந்தஸ்தின் உச்சத்தில் நின்றே அனைவரும் நோக்கும் நியாயமான நிலையினையும் அவதானிக்க முடிகிறது.
அதிலும் குறிப்பாய் வில்பத்து தொடர்பாய் தொடர்ச்சியாய் அமைச்சருக்கெதிராய் இருண்ட இதயம் கொண்ட விசமிகளால் பரப்பப்படும் போலியான குற்றச்சாட்டின் உண்மை நிலையினையும் இந்த ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.அதுவே சட்டத்திற்கு முரணாக அன்றி ஜனநாயக ரீதியாக நீதியான சட்ட திட்டங்களின் பிரகாரமே வடபுல அகதிகளை அவர்களது சொந்தக்காணிகளில் மீளக்குடியமர்த்திய அபிவிருத்திப் புரட்சியினையும் புத்துணர்ச்சியுடன் பறைசாற்றிய விதத்தினையும் மெச்சுவதில் குற்றமேதும் கிடையாது.
கிழக்கு ஊடகவியலாளர்கள் வாழ்வில் உண்மையை நோக்கிய மறக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பயணமாகவே குறித்த பயணம் இன்னும்,இன்றும் ஊடக நெஞ்சங்களில் பசுமரத்தாணி போல் பதிந்து நிழலாடுமென்பது நிஜம்.
வவுனியா,மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வில் மாத்திரமன்றி தமிழ்,சிங்களவர்களின் வாழ்விலும் மறுமலச்சியை ஏற்ப்படுத்தி,அவர்களது துயர் துடைத்து அவர்களை தரமுயர்த்திய சொந்தக்காரனாய் பாகுபாடற்ற சேவைகளின் சொர்ப்பனமாய் அமைச்சர் ரிசாட் காலாகாலமாய் மிளிர்வார் என்பது திண்ணம்.

நஜிமுடீன் எம் ஹஷான்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.