கைக்குழந்தையை கடித்து கொன்ற வீட்டு நாய் - பித்துபிடித்தது போல மாறிய பெற்றோர்

ஸ்பெயினில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று அங்குள்ள கை குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fasnia நகரில் உள்ள ஒரு வீட்டில் Belgian shepherd வகை நாய் வளர்க்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 20 நாட்களே ஆன பிறந்த குழந்தையை அந்த நாய் தலையில் கடித்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாயிடமிருந்து குழந்தையை மீட்டனர்.இது குறித்து மருத்துவமனைக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையளித்தும் குழந்தை இறந்துவிட்டது
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நாயை சுட்டு பிடித்தனர்.
குழந்தையை இழந்ததால் பெற்றோர் பித்து பிடித்தது போல ஆகிவிட்ட நிலையில் அவர்களை உறவினர்கள் தேற்றிய போதிலும் அவர்களுக்கு மனநல மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என தெரியவந்துள்ளது.
நகர மேயர் டாமியன் பெரீஸ் குழந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னர் குறித்த நாய் இதுபோன்று ஆக்ரோஷமாக இருந்ததில்லை என தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.