ஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும் என தான் அஞ்சுவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமாற்ற முன்னெடுப்புக்கள் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது அரசியல் நிலைமாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பற்றிப் பேசப்படுகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள் என்கின்ற பாத்திரத்தை சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் சுமந்துள்ளார்கள்.
ஆனால், நாட்டில் சமீப சில நாட்களாக நாட்டின் நல்லாட்சி அரசாங்க தலைமைத்துவப் பொறுப்புக்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகள் நடப்பதை அறிய முடிகின்றது.
அதன்படி தலைமைத்துவ மாற்றங்கள் நடந்து இடைக்கால ஆட்சி ஏற்படுவது தவிர்க்கமுடியாமற்போகும் பட்சத்தில் நல்லாட்சியின் பங்காளிகளான சிறுபான்மைச் சமூகங்களின் நிலைமை என்னாகுமோ என்ற நியாயமான அச்சம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் ஒரு நாட்டின் ஜனநாயகப் பண்புகளை மதித்து அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது பிரஜைகளின் கடமையாகும்.
அதேவேளை, கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தால் மிகவும் நொந்துபோனவர்களில் முதன்மையானவர்களாக பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கி சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்துவதே எமது நோக்கமாகும்.
நாட்டில் எந்தத் தரப்பினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் சிறுபான்மைச் சமூகங்கள் காலாகாலமாக எதிர்கொண்டுவரும் அரசியல் மேலாதிக்கவாத நெருக்கடிகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். இந்த நாடு சீரழிக்கப்பட்டு சிதறுண்ட சமூகங்களாக அழிவை நோக்கிய பாதைக்கு செல்வதைத் தவிர்க்க ஆட்சியதிகாரத்திற்கு வரும் எந்தத் தரப்பும் முயற்சிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.