நாலக்க டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக்காக  இன்று (திங்கட்கிழமை ) நீதிமன்றத்தில் முன்னிலையான  பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரான நாமல் குமாரகே ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவே நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கமைய இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 23ஆம் திகதி, நாலக்க டிசில்வா மற்றும் நாமல் குமாரகே ஆகியோரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.