சர்வதேச தொண்டு நிறுவனங்களை நாட்டைவிட்டு வேளியோற்றும் பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தினால் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு இந்நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
எனினும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என கூறிக்கொண்டு அந்த அமைப்புகள் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது கடந்த 2011-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்தது. அதனை தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.