சவுதி அரேபியாவில் முதன்முறையாக வங்கி தலைவராக பெண் நியமனம்


சவுதி அரேபியாவில் முதன்முறையாக வங்கி ஒன்றின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உலகளவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சவுதி அரேபியாவில் பல்வேறு சீர்திருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அந்நாட்டின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டார். 

அதை தொடர்ந்து, சவூதியில் செயல்பட்டு வரும் ’சவூதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்’ என்ற ஒருங்கிணைக்கப்பட்ட வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஓராண்டாக சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள சமூகப் புரட்சியால் பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, திரையரங்குகளை செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.