விஜயகலா மகேஸ்வரன் கைதும் விடுதலையும்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 500,000 ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரை பிணையில் விடுவிக்க பொலிஸார் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம்  திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கைது!
ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பாகவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று காலை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரை புதுக்கடை பிரதான  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக அவரை பதவி விலகுமாறும், கைதுசெய்யப்பட வேண்டுமென்றும் எதிர்த்தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா, கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தமது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றிலும் அறிவித்திருந்தார்.  அதனடிப்படையில் இன்று விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.