நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைகிறார் - அரசியல் பிரபலம் கருத்து

இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். முன்னாள் முதல்வவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்குப் பின் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளனர். 
இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில், ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து ராதாரவி பேசுகையில், விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார். அதில் விஜய் அரசியலுக்குள் நுழைய ரகசியமாக திட்டமிட்டு வருவதாகவும், அரசியல் வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி கையாள்வது, ஒரு தலைவனாக மக்களை எப்படி வழிநடத்துவது போன்றவற்றை விஜய் கற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ராதாரவியின் இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், சில நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.