நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்பு!

நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திய இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நினைவுகூரும் இந்த நாளில், இந்த நாட்டு மக்கள் உண்மையான நம்பிக்கையையும் மகிழ்ச்சியினையும் அடைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என அவர் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகை நாளை கொண்டாடும் நாம் இயேசு நாதர் இந்த உலக வாழ்வில் வாழ்ந்தும் போதித்தும் வந்த அன்பு, நீதி மற்றும் பிறரை நேசித்தல் போன்ற படிப்பினைகளை மறவாதிருப்போமாக. மேலும் நம்பிக்கையற்ற சூழநிலைகளில் வாழ்வோர், ஒடுக்கப்பட்டோர், இயலாமையிலுள்ளோர் போன்றவருடன் எம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் நத்தார் பண்டிகையின் உண்மையான தாற்பரியங்களை கடைப்பிடிப்போமாக எனவும் நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் சமத்துவம் அடிப்படையில் இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப முன்வருமாறு இந்நாட்டின் தலைவர்களை நான் அழைத்து நிற்கிறேன் எனவும் சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.