அன்பும், சேவை மனப்பான்மையும் யாவரையும் ஆட்கொண்டிருத்தல் வேண்டும்!

இறை தூதரின் பிறப்பைக் கொண்டாடும் இன்றைய நத்தார் தினத்தில் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக, என வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கிறிஸ்தவ மதத்தின் தனிப்பெருஞ் சிறப்பு அதன் சேவை மனப்பான்மையாகும். தன்னை மறந்து பிறரை நேசித்தவர் இயேசு கிறிஸ்து நாதர். சிலுவையில் அவர் அறைபட்டிருந்த போது ´இறைவனே! அவர்களை மன்னிப்பாயாக! தாம் செய்தது தவறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்´ என்று இறைவனிடம் மன்றாடினார். தன்னை மறந்து தன் இடர்களின் மத்தியிலும் மற்றவர்களை நேசித்தவர் இயேசு கிறிஸ்து நாதர் என வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவ வேண்டும் என்றால் கிறிஸ்தவ அடையாளங்களான அன்பும், சேவை மனப்பான்மையும் யாவரையும் ஆட்கொண்டிருத்தல் வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்குவானாக! யாவர்க்கும் எமது இனிய நத்தார் தின வாழ்த்துக்கள் என, வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.