Our Feeds
app gallery

இன்று கொரோனாவில் 04 பேர் உயிரிழப்பு 90, 60, 78, 75 வயதுடையவர்கள்

 


கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இறுதியாக 4 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.

90 வயதான பெண்ணொருவரும், 60, 78 மற்றும் 75 வயதுகளையுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

app gallery

இலங்கையர் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானிற்குள் பிரவேசிக்க அதிரடி தடை!

 

 


இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்திலுள்ள 11 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க ஜப்பான் (14) முதல் தடை விதித்துள்ளது. 
 கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், ஜப்பான் எல்லைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 ஜப்பானின் டோக்கியோ, ஓசாகா உள்ளிட்ட பல நகரங்களுக்கு அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இதன்படி, இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாட்டு பிரஜைகளுக்கு தமது நாட்டிற்குள் வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், வர்த்தக பயணத்திற்கான ஜனவரி 31ம் திகதி வரை தடை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கொவிட் தொற்றினால் 3 லட்சத்தை அண்மித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4000 வரையானோர் உயிரிழந்துள்ளனர். 
app gallery

2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலை ஆகும் ரஞ்ஜன் ராமநாயக்க!

 
 

நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, தனது சிறைத் தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

 

சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 8 மாதங்கள் மாத்திரமே தண்டனை காலமாக கருதப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடக செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவின் சிறைத் தண்டனை காலம் ஒரு வருடமும் 4 மாதங்களினாலும் குறைவடையும் என அவர் குறிப்பிடுகின்றார்.

 

இதன்படி, ரஞ்ஜன் ராமநாயக்க 2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் என அவர் கூறியுள்ளார்.

 

சிறந்த நடத்தையுடன் செயற்படாத கைதிகளுக்கு இந்த சிறப்புரிமை வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Job Cloction

விசாவுக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட மாணவனுக்கு தக்க பதிலடி கொடுத்த பெண்..!


பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், விசாவுக்காக தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு ஜீவனாம்ச தொகைகையும் நீதிமன்றத்தின் உதவியோடு பெற்றுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Mariam Khaliq என்ற பெண், பிரித்தானியா குடியுரிமையுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த Noushad என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Noushad MBA படிப்பிற்காக மாணவர்களுக்காக வழங்கப்படும் விசாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றுள்ளார்.

இவரது விசாக்காலம் 2 ஆண்டுகள் என்பதால் 2013 ஆம் ஆண்டோடு இவரது விசா கலாவதியாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தான் இவருக்கு, மரியாமின் அறிமுகம் கிடைத்துள்ளது.

தனது விசாவை நீட்டித்துக்கொள்ள வேறு வழி இல்லை என்பதால், மரியாதை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார். ஆனால் நவ்சத் தன்னை உண்மையாக காதலிக்கிறார் என்று நம்பிய மரியாம், அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர், நமது திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு வருகிறேன். அதுவரை நீ காத்திரு என மரியாமிடம் கூறிவிட்டு நவ்சத் கேரளாவிற்கு சென்றுள்ளார். கேரளா சென்ற இவர், நாட்கள் செல்ல மரியாமினுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில், எனது பெற்றோர் நம்முடைய திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் என்னால் இங்கிலாந்து வரமுடியாது என்ற குறுஞ்செய்தியை மரியாமிற்கு அனுப்பியுள்ளார்.

இதில், சந்தேகம் அடைந்த மரியாம், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் உதவியுடன் நவ்சாத் குடும்பத்தை பற்றி அறிய ஆரம்பித்தார். அதன்படி 2015 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சென்ற அவர், நவ்சாத் வீட்டிலேயே சென்று தங்கியுள்ளார்.

மேலும், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை நவ்சாத் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது மரியாமிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், நவ்சாத்தின் பெற்றோர் மரியாமை தங்களது வீட்டில் தங்குவற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து பிரித்தானியா திரும்பிய மரியாம், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இவருக்கு விவாகரத்து கிடைத்தது. மேலும் மரியாமிற்கு தேவையான தொகையை கொடுத்து விடுகிறோம் என நவ்சாத்தின் குடும்பத்தினர் கூறியதால், தனக்கு வேண்டிய தொகையை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார்.

இதுகுறித்து நவ்சாத் கூறியதாவது, நான் படிப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றேன். அங்கு எனது விசாக்காலம் முடிந்துவிட்டதால், மரியாமின் உதவியோடு அங்கு தங்குவதற்கு முடிவு செய்தேன்.

நான் அவருடன் சாதரணமாகத்தான் பழகினேன். ஆனால் அவர்தான் எங்களது உறவினை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.

அதனால் தான், கேரளாவிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினேன் என கூறியுள்ளார்.
Job Cloction

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதா என விவாதம் செய்ய முடியும் - அரசாங்கம்


நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதா என்பது குறித்து நாடாளுமன்றில் விவாதம் செய்ய முடியும் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடிகள், துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினை இந்த அரசாங்கம் நிறுவியது.

இந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றில் விவாதம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது என ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இது குறித்து நாடாளுமன்றில் தெளிவுபடுத்துமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன அவைத் தலைவரிடம் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சட்ட ரீதியான தன்மை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்த முடியும் என கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது என விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Cloction

மாலபே - தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க மஹிந்த 600 மில்லியன் ரூபா கடனுதவி..!


மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்

குறித்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்காக கடன் அடிப்படையில் மஹிந்த 600 மில்லியன் ரூபாவினை வழங்கியதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியையும் அதன் மாணவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வித்துறையை தரமுயர்த்தி மேம்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை கொண்டு நடாத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல கோரியுள்ளார்.
Job Cloction

மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவெடுக்கவில்லை: தினேஸ் குணவர்தன


எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், இதுவரையில் மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, எனினும் ரணிலின் அரசாங்கம் மத்திய வங்கியில் களவாடியுள்ளது.

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் ஜனாதிபதி எப்போதும் மஹிந்த ராஜபக்ச மட்டுமேயாகும்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு காய்களாக வெட்டி வீழ்த்தப்படுவதாகவும் இன்னும் சில காய்களே எஞ்சியிருப்பதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Job Cloction

பரபரப்பாகும் தமிழகம் - ஓ.பி.எஸ்க்கு சசிகலா எச்சரிக்கை..!


தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க வின் பொது செயலாளரா பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா தாமே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற நினைப்பில் இருந்தார்.

இதற்காக தனது உடை, நடை உள்ளிட்ட அனைத்தையும் ஜெயலலிதாவை போல மாற்றிக்கொண்டார். எனினும், கடந்த சில நாட்களாக அவரின் செயற்பாடுகள் முடங்கிபோயிருந்தன.

அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பை கட்சி தலைமையகத்தில் நடத்தினார். ஆனால் சசிகலா வந்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடியே இருந்துள்ளது.

இதனையடுத்து, 'கூலிக்கு' ஆட்கள் வரவழைக்கப்பட்டு கோஷம் போட வைக்கப்பட்டனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டம் வெடித்திருந்தது.

இந்த போராட்டம் சசிக்கலா என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதையே மறைக்க செய்தது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாரத பிரதமரை சந்திப்பதற்கு முதலமைச்சர் ஓ.பி.எஸ் டெல்லி சென்றிருந்தார்.

அத்துடன், டெல்லியில் இரண்டு நாள் முகாமிட்டிருந்த நிலையில். மீண்டும் தமிழகம் திரும்பியிருந்த ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்தார்.

இதனையடுத்து ஓ.பி.எஸ் இன் செல்வாக்கு சற்று அதிகரிக்க, அது மன்னார் குடி தரப்புக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முதலமைச்சருக்கு போட்டியாக ஜல்லிக்கட்டுக்காக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சசிகலா கடும் விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முதலமைச்சர் பதவி குறித்து கணவர் நடராஜன் முரண்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க குடியரசு தினத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் சசிகலாவுக்கு மாத்திரம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதனை சகித்துகொள்ள முடியாக மன்னார்குடி தரப்பு சசிக்கலவையும் போக அனுமதிக்கவில்லையாம். மேலும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையிலும் எந்த நிகழ்ச்சியிலும் இல்லாததால் சசிகலா படம் பொதுக்கூட்ட பதாதைகளில் இருந்தவையே வருகின்றதாம்.

நிலைமை இப்படியே போனால் தமது கட்சிக்காரர்கள் கூட தம்மை மறந்துவிடுவார்கள் என நினைத்து திடீரென அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், எம்.பிக்கள் கூட்டத்தை சசிக்கலா கூட்ட சொல்லியுள்ளார்.

இதன், மூலம் தமக்கு போட்டியாக இருக்கும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுத்தது போன்று இருக்கும் என்பதும் மன்னார்குடி தரப்பின் எண்ணம்.

பொதுவாக சட்டசபை கூட்டத் தொடருக்கு முதல் நாளோ அல்லது அன்றைய தினம் காலை பொழுதிலோ கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

எனினும், சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிக்கலா கூட்டியிருக்கிறார். இதன் மூலம் கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சசிக்கலா காட்ட முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தன்னிச்சையாக செயற்பட நினைத்தால் கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்படுவீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எச்சரிப்பது போலவும் இருக்கும் என்பதும் மன்னார்குடி தரப்பின் எண்ணம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Job Cloction

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் தவிர்க்க முடியாத சுழல் ஏற்படும் - இரா.சம்பந்தன் எச்சரிக்கை


தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாது போனால் தவிர்க்க முடியாத சுழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் எச்.எம்.மொஹமட் விரும்பியிருந்தார்.

அத்துடன், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தீவிரமாக நம்பியிருந்தார். எனினும், அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த அரச தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இதன் காரணமாக, அவருடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனது, இவ்வாறான நிலையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கடினமானது என பின் ஒரு நாளில் எச்.எம்.மொஹமட் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலைமை இன்னமும் தொடர்கிறது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. இது எதிர்பார்க்காத நிலைமைகளை நாட்டில் ஏற்படுத்தும் என இரா.சம்பந்தன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Job Cloction

ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் சமுத்திரம் - 800 வருடங்கள் அழியா தொழில்நுட்பத்துடன்..!


உலகில் எத்தனையோ சமுத்திரங்கள் காணப்படுகின்றன அவை அனைத்தும் , யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. இயற்கையாக உருவானதாகும்.

ஆனால் உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு சமுத்திரத்தைக் கொண்ட நாடு என்றால் அது கட்டாயம் இலங்கையாக மட்டுமே இருக்க முடியும். அந்தவகையில் மாபெரும் சமுத்திரமாக இலங்கையில் திகழும் ஒரு சமுத்திரம்தான் பராக்கிரம சமுத்திரம்.

“ வானத்திலிருந்து விழும் ஒருதுளி நீரையேனும் விவசாயத்திற்கு பயன்படாது வீணே கடலை சென்றடைய விடமாட்டேன்” என சிங்கம்போல் முழங்கிய ஒருவனின் படைப்பு, காலம் கடந்தாலும் இலங்கை தேசத்தின் வரலாற்றினையும் இலங்கைக்கான புகழையும் தினம் தினம் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நீர்த்தேக்கம்தான் பராக்கிரம சமுத்திரம்.

கி.பி 1153 முதல் 1186 வரை இலங்கையினை ஒரு குடையின் கீழ் கொண்டு ஆட்சிபுரிந்த மன்னனான முதலாம் பராக்கிரம பாகுவினால் பராக்கிரம சமுத்திரம் பொலன்நறுவையில் உருவாக்கப்பட்டது.

பொலன்னறுவை நகருக்கு முதன் முதலில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் நகரை அண்மித்ததும் காணும் கால்வாய்க்கு அடுத்ததாக, இது குளமா அல்லது சமுத்திரமா என வாய் பிளக்கும் அளவுக்கு நீண்டு காணப்படும் சமுத்திரம் இது.

பல்வேறு தொழில்நுட்ப சக்திகளை வரலாற்று காலத்திலேயே பயன்படுத்தியமைக்கான சக்தியாக மிளிர்கின்றது.

கி.பி 1123 இல் கேகாலையில் புங்கமவில் அரசர் மாணா பரணவுக்கும் ரத்னாவலிக்கும் பராக்கிரமபாகு மகனாக பிறந்தான்.

இராச்சியங்களை ஒன்றினைப்பதிலும் இலங்கை நாட்டை குறிப்பாக பொலன்னறுவையை வளர்ச்சி மிக்க பிரதேசமாகவும் மாற்றுவதற்காக அயராது உழைத்தான்.

மேலும் தன்னுடைய தலைநகரை அழகாக பேணுதல், மேற்பார்வை செய்தல், போன்ற பணிகளில் சுயமாகவே ஈடுபட்டான்.இவனின் ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்படாத குளங்கள் அதிகம் காணப்பட்டன. எனவே குளங்களை புனரமைத்து நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதில் அதிகம் கரிசனையுடன் செயற்பட்டான்.

குறிப்பாக அந்த காலத்திலேயே தனது நாட்டுக்கென தனியானதொரு இராணுவப்படைகளை உருவாக்கி வைத்திருந்தான்.

விவசாயத் தேவைகளுக்கு இவன் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் இலங்கையை தெற்காசியாவின் தானியக்களஞ்சியம் என பெயர் வருவதற்கு காரணமாக அமைந்தது.

“ வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் விவசாயத்திற்கு பயன்படாது வீணே கடலை சென்றடைய விடமாட்டேன்” என்பதே அவனது புகழ்பெற்ற மகுட வாசகமாகும்.

நாட்டின் விவசாயத் தேவைக்காக தனியானதொரு நீர்த்தேக்கத்தை உருவாக்க நினைத்தான், அதற்கு பராக்கிரம சமுத்திரம் என பெயரிட்டதோடு பெயருக்கேற்றாற் போல மிகப்பெரும் சமுத்திரத்தை உருவாக்கினான்.

55 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை எழுப்பினான். இச்சமுத்திரத்தின் நீர்க்கொள்ளளவு 109,000 ஏக்கர் அடியாகும்.

சமுத்திரத்தின் பிரதான மூன்று ”கலிங்கற்களால்” விவசாயத்திற்கு தேவையான நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

குறிப்பாக சமுத்திரத்தில் நீர் மட்டம் குறையாதிருக்க தோபா வாவி, எரமுது வாவி, தும்புட்டுழு வாவி, கல்லகஹல வாவி, பூ வாவி, பெதி வாவி முதலான வாவிகளை பராக்கிரம சமுத்திரத்தோடு இணைத்தான்.

ஆனாலும் பராக்கிரம சமுத்திரத்தோடு 11 வாவிகள் தொடர்புபட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.

குறித்த வாவி மூலம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வயற்பரப்புக்கு நீர் விநியோகம் செய்யப்படும் அளவிற்கு நீர்மட்டம் நிரம்பி காணப்பட்டது.

இதன் காரணமாக பெருமளவிலான உற்பத்திகள் அதிகரித்தன. பராக்கிரமபாகுவின் ஆட்சி காலம் வரலாற்றில் தடம் பதிப்பதற்கு அவன் ஆற்றிய சேவைகளே பெரும்பாலும் காரணமாயின.

ஆனாலும் இந்நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்காக இவன் பயன்படுத்திய தொழில்நுட்பம் தற்கால தொழில்நுட்பவியலாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இச்சமுத்திரம் உருவாக்கப்பட்டது என்பது புரியாத பதிராகவே காணப்படுகின்றது.

ஏனெனில் தனி மனிதன் மாபெரும் சமுத்திரம் போன்று ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருக்கின்றான் என்றால் எத்தகைய தொழில்நுட்ப அறிவினை கொண்டிருக்க வேண்டும் என பொறியிலாளர்களே பிரமித்து நிற்கின்றனர்.

பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கட்டப்படும் இன்றைய கட்டடங்களுக்கு அமைவாக கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் ஒரு சமுத்திரத்தை தனி மனிதனால் எவ்வாறு சிந்தனை செய்து படைத்திருக்க முடியும் என்று பலரும் குழம்பிதான் போயுள்ளனர்.

ஆனாலும் அவர்களின் கனவு, எதிர்பார்ப்பு என்பவற்றையெல்லாம் தகர்த்து வரலாற்றில் நினைத்துப்பார்க்க முடியாதளவிற்கு சாதனையின் சின்னமாகவும் விவசாயத்தின் அடித்தளமாகவும், பராக்கிரம சமுத்திரம் மிளிர்கின்றது.

இலங்கையில் விவசாயத்திற்கென உருவாக்கப்பட்ட மாபெரும் சமுத்திரமும் இதுதான். உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு செயற்கை சமுத்திரமும் இதுதான்.

காலங்கள் அழிந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகள் தாண்டினாலும் அழியாத இலங்கையின் சின்னமாய் இது மட்டுமே வரலாற்றில் அழுத்தமாகப்பதியப்படும்.