தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க வின் பொது செயலாளரா பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா தாமே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற நினைப்பில் இருந்தார்.
இதற்காக தனது உடை, நடை உள்ளிட்ட அனைத்தையும் ஜெயலலிதாவை போல மாற்றிக்கொண்டார். எனினும், கடந்த சில நாட்களாக அவரின் செயற்பாடுகள் முடங்கிபோயிருந்தன.
அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பை கட்சி தலைமையகத்தில் நடத்தினார். ஆனால் சசிகலா வந்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடியே இருந்துள்ளது.
இதனையடுத்து, 'கூலிக்கு' ஆட்கள் வரவழைக்கப்பட்டு கோஷம் போட வைக்கப்பட்டனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டம் வெடித்திருந்தது.
இந்த போராட்டம் சசிக்கலா என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதையே மறைக்க செய்தது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாரத பிரதமரை சந்திப்பதற்கு முதலமைச்சர் ஓ.பி.எஸ் டெல்லி சென்றிருந்தார்.
அத்துடன், டெல்லியில் இரண்டு நாள் முகாமிட்டிருந்த நிலையில். மீண்டும் தமிழகம் திரும்பியிருந்த ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து ஓ.பி.எஸ் இன் செல்வாக்கு சற்று அதிகரிக்க, அது மன்னார் குடி தரப்புக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முதலமைச்சருக்கு போட்டியாக ஜல்லிக்கட்டுக்காக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சசிகலா கடும் விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முதலமைச்சர் பதவி குறித்து கணவர் நடராஜன் முரண்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க குடியரசு தினத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் சசிகலாவுக்கு மாத்திரம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதனை சகித்துகொள்ள முடியாக மன்னார்குடி தரப்பு சசிக்கலவையும் போக அனுமதிக்கவில்லையாம். மேலும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையிலும் எந்த நிகழ்ச்சியிலும் இல்லாததால் சசிகலா படம் பொதுக்கூட்ட பதாதைகளில் இருந்தவையே வருகின்றதாம்.
நிலைமை இப்படியே போனால் தமது கட்சிக்காரர்கள் கூட தம்மை மறந்துவிடுவார்கள் என நினைத்து திடீரென அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், எம்.பிக்கள் கூட்டத்தை சசிக்கலா கூட்ட சொல்லியுள்ளார்.
இதன், மூலம் தமக்கு போட்டியாக இருக்கும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுத்தது போன்று இருக்கும் என்பதும் மன்னார்குடி தரப்பின் எண்ணம்.
பொதுவாக சட்டசபை கூட்டத் தொடருக்கு முதல் நாளோ அல்லது அன்றைய தினம் காலை பொழுதிலோ கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
எனினும், சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிக்கலா கூட்டியிருக்கிறார். இதன் மூலம் கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சசிக்கலா காட்ட முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தன்னிச்சையாக செயற்பட நினைத்தால் கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்படுவீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எச்சரிப்பது போலவும் இருக்கும் என்பதும் மன்னார்குடி தரப்பின் எண்ணம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.