பெற்றோர் என்னில் கவனிப்பு இல்லை எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் கிளிநொச்சியில் 15 வயது மாணவி தற்கொலை.

கடந்த 19ம் திகதி கிளிநொச்சி  யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில்15 வயது  மாணவி ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இவர் கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் புவனேஸ்வரன் கார்விழி கயல் எனும் (15-வயது) மாணவியே இவ்வாறு தற்காெலை செய்து காெண்டுள்ளார்.தந்தை இரண்டு திருமணம் முடித்த நிலையில் பிரிந்திருந்த குடும்பம் இரண்டு மாதங்களாக சுமூக நிலையை அடைந்திருந்ததுஇவரது தாயார் கூலி வேலைக்குச் சென்று வருபவர்.

இந்நிலையில் மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்தில் அம்மம்மாவின் வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றே தற்கொலை செய்துள்ளார்.“எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். பெற்றோர் என்னில் கவனிப்பு இல்லை” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே தூக்கிட்டு இறந்துள்ளார்.


இரவு 12 மணியளவிலேயே கிளிநொச்சி பொலிஸார் அங்கு வந்துள்ளனர். போலீசாரிடம் முறைப்பாடு செய்து நான்கு மணித்தியாலங்கள் வரை தாமதமாக பொலிஸார் வந்தது அப்பகுதி மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது கொலையா  அல்லது கொலையா? என்ற இரு வேடத்தில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments