பௌத்த மதகுரு ஒருவருக்கு மூன்று பேர் கொண்ட குழுவினறால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மட்டக்களப்பு  ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த பிக்குவான சுபத்தாலங்காரம கிமி என்பவருக்கு மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்டு அசைய முடியாமலிருந்த பிக்குவை பொலிசார் மீட்டு, சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர.

கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை குறித்த பௌத்த பிக்கு, விகாரையில் தமது வழமையான பணிகளை மேற்கொண்டிருந்தபோது மது போதையில் மூன்று சிங்கள இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர்.அந்த பகுதிகளில் சட்டவிரோத செயட்பாடுகள் நடைபெறுவதால் இளைஞர்கள் வருவதை கண்ட பௌத்த பிக்கு , எச்சரிக்கையடைந்த பிக்கு, அவர்கள் குறித்து வினவியுள்ளார் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டபோது, அங்கிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.

ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவர், பிக்குவை மிக கடுமையாக தாக்கியுள்ளான். கையிலிருந்த கொட்டானால் தாக்கி, கடுமையான காயமேற்படுத்தியுள்ளான் அத்துடன், அங்கிருந்த  பல உடைமைகளையும் அடித்து தாக்கியுள்ளார் தாக்குதலில் படுகாயமடைந்து வீழ்ந்த பிக்கு, நடமாட முடியாத நிலையில், பொிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பிக்குவை மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசாரிடம் அந்த பிக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவிட்டுள்ளார் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments