111AAA

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பமும்,வறட்சியும் நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் அலைபாய்ந்து வரும் நிலையில்.

அவுஸ்திரேலியாவில் இம்முறை வரலாறு காணாத  அளவுக்கு வெப்பமும்,வறட்சியும் நிலவுகிறது.

நீருக்கு தண்ணீருக்காக மக்கள் அலைபாய்ந்து வரும் நிலைமை.

பல இலட்சம் நீர் இலட்சம் லீற்றர் தண்ணீரைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகருக்கு அருகே உள்ள இவான்ஸ் எனும் சிறிய நகரில்தான் விவசாயி ஒருவரின் வீட்டில் இருந்து 3 இலட்சம் லீற்றர் தண்ணீர் 80 ஆயிரம் கலன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலியாவில் உள்ள நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த விவசாயி தன்னுடைய பண்ணையில் தன்னுடைய பயன்பாட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்திருந்தார்.

கடந்த 9ம் திகதி முதல் 15ம் திகதிக்கு இடையே 3 இலட்சம் லீற்றர் தண்ணீரை யாரோ சிலர் கொள்ளையடித்துள்ளனர் என அந்த விவசாயி தெரிவித்துள்ளார்.காலநிலை மாறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயிலும், வறட்சியும் நிலவுகிறது. இதுதவிர அவுஸ்திரேலியன் காடுகளில் காட்டுத் தீ ஆங்காங்கே பற்றி எரிந்து வருகிறது. இதனால், மக்கள் தங்களுடைய கோடைக்காலத்தை இன்பமாகக் கழிக்க முடியாமல் திணறுகின்றனர்.

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்  முர்விலும்பாவ் எனும் சிறிய நகரில் ஏறக்குறைய 25 ஆயிரம் லீற்றர் 6600 கலன் தண்ணீர் 6 முதல் 7 டேங்கரில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வாழ்வதற்குத் தேவையான குடிநீரைப் பெறுவதற்கே போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு மக்கள் எதிர்காலத்தில் தள்ளப்படும் அபாய சூழலை விளக்கும் மோசமான கற்பனை உலகை இந்தச் சம்பவம் உணரச் செய்கிறது.அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சராசரியாக 40.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலியாவின் காலநிலை ஆய்வாளர் டேவிட் காரோலி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதின் விளைவே கடுமையான வெப்பம் சுட்டெரிக்கிறது. ஒரு டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது மற்றும் காட்டுத் தீ ஏற்பட்டு, ஏராளமான மரங்களும் எரிந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிட்னியில் காஸ்பர்ஸ் மலைப்பகுதியில் 74 இலட்சம் ஏக்கர் வனப்பரப்பு எரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய நாடு மிக மோசமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சந்தித்து வரும்போது அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மக்களைத் தவிக்கவிட்டு விடுமுறைக்குச் சென்றுவிட்டார். ஹவாய் தீவில் தனது குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களைக் கழித்துவரும் அவரின் புகைப்படம் அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதுஅவுஸ்திரேலிய ஊடகங்களும், மக்களும் அதிருப்தி தெரிவித்து வருவதை அறிந்த பிரதமர் ஸ்கொட் மொரிஸன், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி அறிக்கையும் நேற்று வெளியிட்டார். அதில், “அவுஸ்திரேலிய மக்கள் காட்டுத் தீ, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தேன். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் என் குடும்பத்தாருடன் வந்துள்ளதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

அவர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Australia is experiencing such heat and drought as never before.
A situation where people are wandering for water.Several hundred thousand liters of water have been plundered.

Australia's daily newspaper reports that 80,000 gallons of water was stolen from a farmer's home in Evans, a small town near New South Wales, Australia. The farmer stored water for his use and agriculture on his farm.

The farmer said that somebody had plundered more than 300,000 liters of water between the 9th and 15th of last month. In addition, wildfires are burning around the Australian forest. As a result, people are unable to spend their summers happily.

Officials say that some 25 thousand liters of 6600 gallons of water from 6 to 7 tankers have been plundered in the small town of Murwillumba, just a few weeks ago. The incident makes sense to the imaginary world. Over the past few weeks, Australia has been experiencing intense heat. The average temperature is 40.9 degrees Celsius, with a maximum of 41.9 degrees Celsius.


Australia's climate analyst, David Caroly, told the news agency: “The extreme heat is a result of the intensification of climate change. Temperatures have risen from one degree to 15 degrees Celsius and wildfires have caused a number of trees to burn. In the last two months alone, 74,000 acres of forest in Kaspers Hills in Sydney have been burned. ”


Australia's Prime Minister Scott Morrison has left the country on vacation when the Australian country faces the worst climate change. Prime Minister Scott Morrison issued a statement yesterday expressing his displeasure with the Australian media and the public for expressing his displeasure at a photo of him spending holidays with his family on the island of Hawaii. In it, he said, “I knew that the Australian people were suffering from the effects of wild fire and climate change. I apologize for coming to my family without taking action.

He is reportedly back in the country today
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments