111AAA

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் : 20ம் திகதிக்கு முன் விண்ணப்பபடிவம் ; முழு விபரம் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள்.


பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இதற்கான  பணிகள் ஆட்கள் தெரிவு செய்தல் முறைமை மற்றும் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி 20ம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என  ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இதன் நோக்கம் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின்  மிகவும் வறிய நிலையில் உள்ள,குடும்பங்களில் சமுர்த்தி உதவி பெற தகுதியிருந்தும்  சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதாகும்.

இத்தகைய குடும்பங்களை தெரிவு செய்து  அவர்களின் குடும்பங்களில், தொழிலாளர் சக்தியில் பங்களிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்ட பின்னர், சம்பந்தப்பட்ட துறைகளில் ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும்.


இந்த புதிய வேலைத்திட்டத்துக்காக  கல்வியறிவு குறைந்தவர்களை  இளங்கன்டு இதன் முதல் கட்டமாக இலங்கை முழுவதும் 100,000 புதிய வேலை வாய்ப்புகள்  வழங்கப்படவுள்ளது .

இவைகளை நிர்வகிக்க பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி கற்றவர்கள்  வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும்  சுமார் 300 தொடக்கம் 350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பிரதேசத்திலுள்ள விஹாரதிபதி,  மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களின் மேற்பார்வையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்த தேர்வின் சரியான தன்மையை மேலும் உறுதிப்படுத்த பாதுகாப்பு படையினரில் திறமையான பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகள் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் கல்வியறிவு தேவைப்படாத வேலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும் தச்சு, விவசாயம், மீன்வளம், வனவியல் மற்றும் பிற பகுதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் சேவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ் அனைத்து பயிட்சிகள்,ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.






සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments