கடந்த 2019ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா எத்தனை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது தெரியுமா? வியக்க வைக்கும் தகவல் உள்ளே ?

கடந்த 2019ம்   ஆண்டு மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா மொத்தமாக 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாட்டில் நிறைவேற்றப்பட்ட அதிகமான மரண தண்டனை இதுவாகும். என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மற்றும் கடந்த வருடம் 2019 ம் ஆண்டு  ஏப்ரலில் ஒரே நாளில் 36 பேருக்கு தலை துண்டாக்கி மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ‘பயங்கரவாதம்’ குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இதில் 21 வயதான அப்துல்கரீம் அல்-ஹவாஜ்-ம் அடங்குவார். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதற்காக அவர் 16 வயதில் கைது செய்யப்பட்டார். இவருக்கும் இத்தினத்தில் தலை துண்டாக்கி மரண தண்டனை வழங்கப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்டபோது சிறுவராக இருந்த எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற மாட்டோம் என்று சவுதி அரேபியா உறுதியளித்த போதிலும் இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதன் புள்ளி அடிப்படையில் 184 பேரில் 1 வர்  ஓரின சேர்க்கையாளராக இருந்தார். 2019ல் 'பயங்கரவாத' குற்றங்களுக்காக 37 பேரும், போதைப்பொருள் கடத்தலுக்காக 82 பேரும், கொலைக்கு 57 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.



இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களில் 84 பேரில் 88 பேர் சவுதிகள், 90 பேர் வெளிநாட்டினர் மற்றும் ஆறு பேர் அறியப்படாத தேசத்தினர். என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

மற்றும் சவுதி அரேபியாவில் மரண தண்டனையை நிறுத்துவதர்க்கு  பல நாடுகள் அழுத்தம் குடுத்தாலும் அது அதுவாகவே நடைபெற்று வருகின்றது.

இந்த மரணதண்டனைக்கு எதிராக வர அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதிக்கு சர்வதேச அழுத்தங்களை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments