ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்காக எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது : முன்னாள் அமைச்சர் பௌசி ; பௌசியின் மனு மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு.

முன்னாள் அமைச்சரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பாராளமன்ற உறுப்பினருமான A.H.H பௌசி இருந்து தன்னை நீக்குவதற்காக எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்ய மனுவை மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குறித்த மனு இன்று 20ம் திகதி  விஜித் மலல்கொட, S . துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சுமத்தியே என்னை சுதந்திர கட்சியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக அறிவித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறியக்கிடைத்ததாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு ஊடாக தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் என்னிடம் எதுவித ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன, அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments