கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: 57 பேர் கைது.

இலங்கையின் தலைநகரமான கொழும்பின் capital  சில பகுதிகளில் ஆயுர்வேத நிலையம் மசாஜ் massage center நிலையம் என்ற போர்வையில் பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி கடந்த 16ம் திகதி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டவிரோதமாக விபச்சார விடுதிகள் பராமரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 35 ஆயுர்வேத நிலையம் மசாஜ் நிலையங்கள் massage center  சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு விபச்சார விடுதியின் முகாமையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் பராமரித்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments