சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கொழும்பு குற்றவியல் பிரிவில்.

நீதிபதி பத்மினி ரணவக்க 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கொழும்பு குற்றவியல் பிரிவில் இருந்து வெளியாகியுள்ளார்.

இலங்கை சட்டமா அதிபரின் உத்தரவிற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் T. D. லிவேரா கடந்த 16ம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பொருட்டு இந்த வாக்குமூலம் இன்று 20ம் திகதி கொழும்பு குற்றவியல்  திணைக்களத்தில் இந்த வாக்கு மூலம் பெறப்பட்டது .සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments