சமூக ஊடகங்களை பயன்படுத்தி இஸ்லாம் மார்க்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.


சமூக ஊடகங்களை பயன்படுத்தி இஸ்லாம் மார்க்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 இலங்கையர்களுக்கு டுபாய்  Dubai நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அதற்கமைய ஒருவருக்கு டுபாய் பண மதிப்பில் 5 இலட்சம் திர்காம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தின் இலங்கை பெறுமதி அன்னளவாக சுமார் இரண்டரை கோடி ரூபாவாகும்.

டுபாயில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் கடமையாற்றிய மூவருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அபாராத தொகையை செலுத்திய பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

instagram மற்றும் Facebook  ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்தி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்து அவர்கள் பணி புரிந்த விடுதியின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர்.

அதற்கமைய அவர்கள் மீது கடந்த வருடம் மே may  மாதம் 19ம் திகதி பார்ஸா பொலிஸார்  டுபாய் Dubai  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வகையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை குற்றவாளிகள் ஏற்றுக் கொண்டதுடன் சமூக ஊடகங்களில் பொருத்தமற்ற செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பை எதிர்த்து இதுவரை மேன்முறையீடு செய்யப்படவில்லை என டுபாய்  Dubai ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments