அவுஸ்திரேலியா மெல்பர்னில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்: இலங்கையர் 5 பேர் கைது.

அவுஸ்திரேலியா மெல்பர்னில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 5 இலங்கையர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிராக மெல்பர்ன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழுவினர் சுமார் இரண்டு மாதக்காலமாக குறித்த விற்பனை நிலைய வளாகத்தில் மற்றும் ரயில் நிலையங்களில் பிற நபர்களின் பணப் பைகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 26 வயதுடைய யுவதி ஒருவரும் மற்றும் வயது 25 க்கும் 32 க்கும் இடைப்பட்டவர்கள் நால்வரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments