புத்தளம் இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம் , வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இதில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளேகடந்த 14ம் திகதி   மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து தோட்டமொன்றை பராமரிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னரே புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.


உயிரிழந்த சந்திரகுமாரி வயது 36, அவரது மகன் கிருஷ்ணகுமார் வயது 17, அவரது மகள் சுபாஷினி வயது 19 ஆகிய மூவரே இவ்வாறு இறால்மடு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். என வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 14ம் திகதி மாலை 4.30pm  அளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வனாத்தவில்லு  இறால்மடு குளத்தில் நீராடச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.தாயின் ஏழு வயது பெண் குழந்தை நீராடாமல் குளித்திற்கு அருகில் இருந்துள்ளதுடன், ஏனைய மூவரும் குளத்தில் நீராடுவதற்காக சென்றுள்ளதாகவும் இதன்போது குறித்த மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிர் இழந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் சடலங்களும் பிரேத மற்றும் மரண விசாரணைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வனாத்தவில்லு  பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உயிர் இழந்த  மூவரின் பிரேத மற்றும் மரண விசாரணைகல் முடிந்த பின் சடலங்க உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வனாத்தவில்லு  பொலிஸார் தெரிவித்தனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments