ஜும்ஆ மசூதியில் ஒலித்த "மாங்கல்யம் தந்துனானே...."

இந்தியா கேரள மாநிலத்தில் காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் நேற்று 20ம் திகதி காலை 11.30am  மணிக்கு நடைபெற்றது..


சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் - சிந்து தம்பதியர் மகள் அஞ்சு..

தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் கண் கலங்கிய நாட்கள் அதிகம்.தனது மகளின் திருமண உதவி கோரி ஏதோ ஒரு நம்பிக்கையில் சேராவள்ளி ஜமாஅத் நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்க அந்த கடிதத்தை பரிசீலனை செய்த ஜமாஅத் நிர்வாகிகள் சிந்துவின் குடும்ப வறுமையை கவனத்தில் கொண்டு முழு செலவையும் ஏற்றுக்கொள்ள தீர்மானித்தனர்..சிந்துவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சரத் என்ற மணமகனுடனான திருமணத்திற்கு சேராவள்ளி ஜமாஅத் செயலாளர் நுஜுமுதீன் பெயரிலேயே அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு ஜும்ஆ மசூதி வளாகத்திலேயே பிரமாண்ட பந்தலில் மசூதி நிர்வாகிகள், சமூகத்தின் பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது..ஜமாஅத் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை பகிர்ந்து கொள்ள ஊர் மக்கள் சுமார் மூவாயிரம் பேருக்கு சிறப்பான அறுசுவை சைவ உணவும் வழங்கப்பட்டது....திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு தனது குடும்பத்தை இழந்த மணமகள் மணமகளுக்கு 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததோடு, திருமண செலவையும் ஏற்றெடுத்து, சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இன்று இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது.திருமணத்தை  முஸ்லிம் பள்ளியில் வைத்து ஹிந்து முறைப்படி நடந்தது.இதற்கிடையே, இந்த திருமணத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண புகைப்படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டதுடன், கேரள மாநிலம் மத நல்லிணக்கத்துக்கு எப்போதும் உதாரணமாக திகழ்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நேரத்தில் இந்த திருமணம் நடந்துள்ளதாகவும், கேரளா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments