111AAA

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கான இருவருக்கிடையிலான சந்திப்பது ஜனாதிபதி செயலகத்தில்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்று 18ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சமூத்திர பாதுகாப்பு, இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான சமூத்திர வலயம் தொடர்பிலும் அதன் முக்கியதுவம்; குறித்தும் தோவால் எடுத்துரைத்துள்ளார்.

அதேபோல் இரகசிய தகவல்களை திரட்டும் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவி ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments