ஊடகவியலாளர் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்.


புத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீமில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் அகில இலங்கை சமாதான நீதிவானாக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் S. லெனின்குமார் முன்னிலையில் இன்று 21ம் திகதி  செவ்வாய்க்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாக கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை மதுரங்குளி கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பெருக்குவற்றான் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.

கொழும்பு நாரஹேண்பிட்டியிலுள்ள இலங்கை இதழியல் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு ஒரு வருட முழு நேர ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த இவர், தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணயத்தள புத்தளம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்.

முந்தல் பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இவர், புத்தளத்தில் இயங்கி வரும் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம், பாலாவி ரத்மல்யாய முல்லை ஸ்கீம் நூராணிய்யா ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு என்பனவற்றின் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.இவர் முல்லைத்தீவு தண்ணீரூற்றைச் சேர்ந்த முஹம்மது சுல்தான் ரஸீன் - அப்துல் காதர் ஹாஜரா உம்மா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments