ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் ஊழல் மோசடிகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


ஹொரணை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் ஊழல் மோசடிகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என தெரிவித்தார் .

ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட, நாட்டின் சொத்துக்களை சேதமாக்க இடமளிக்க முடியாது.இதனாலேயே நேரடி தீர்மானங்களை மேற்கொள்ள சிறந்த தலைவர் ஒருவர் நமக்கு தேவை.அதற்கு இந்த வருடம் ஒரு சிறந்த வருடமாக அமையும் என எதிர்பார்க்கிறேன் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயங்கள் ஊழல்களை கட்டுப்படுத்தவில்லை என்றால், பொதுமக்கள் எம்மையும் துரத்தியடிப்பார்கள். மக்கள் எம்மில் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர் இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் காட்டினார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சிறந்த வேட்பாளர்களை களமிறக்க அந்தந்த கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கட்டாயம் மேற்கொள்ளப் பட வேண்டும்.இந்த பயணத்தை திருடர்களை வைத்துக் கொண்டு செல்ல முடியாது.அரசியல்வாதி ஒருவரை சிறையில் வைப்பது என்பதும், பொதுமகன் ஒருவரை சிறை வைப்பதும் ஒன்றே.

நாம் அனைவரும் குடிமக்கள். எனினும் எவராவது குற்றம் புரிந்திருந்தால் அந்த குற்றத்திற்கு சட்டத்தின் படி தண்டனை கிடைக்க வேண்டும் என்றார் இராஜாங்க  அமைசர் விதுர விக்கிரமநாயக்க.


மக்கள் எம்மை நம்பி வாக்களித்தவர்கல் இதனாலயே  அவர்களது எதிர்பாப்புகளை நாம் செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber
.
.

Post a Comment

0 Comments