கண்டியன் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை நீக்குவதற்கான பிரேரணை : அத்தரலியே ரத்ன தேரர்.

இலங்கையில் கண்டியன் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை நீக்குவதற்கான பிரேரணை இன்று 21 திகதி  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரரினால் சமர்பிக்கப்பட உள்ளது.


இன்று பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் ஒன்றுகூட உள்ள நிலையில் இதன்போது  இந்த குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரரினால் சமர்பிக்கப்பட உள்ளது.


இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பிரேரணையாக கண்டியன் விவாக சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் விஷேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமான நீதிமன்ற முறையை நிராகரித்தது போன்று கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முஸ்லிம் விவாக சட்டம் மட்டுமல்லாது கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்குவதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments