111AAA

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் மூவரினதும் சடலங்கள் நேற்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


 அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் மூவரினதும் சடலங்கள் நேற்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் உயிரிழந்த இலங்கை மாணவிகள் மூன்று பேரின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


டோஹாவில் இருந்து  இலங்கைக்கு வந்த விமானம் மூலமே சடலங்கள் நேற்று காலை  9.15am  அளவில் கொண்டு வரப்பட்டன.

கத்தார் நாட்டின் இலங்கைக்கான தூதரகம் மற்றும் ஈரானின் தெஹ்ரானுக்கான இலங்கை தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.



இதற்கான அனைத்து செலவுகழும்  இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது.

அஸர்பைஜானில்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவிகள், தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் கடந்த ஒன்பதாம் திகதி மாணவிகள் மூவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அஸர்பைஜானின் பகூவில் உள்ள வெஸ்டர்ன் கெஸ்பியன் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25 வயதானவர்கள் இவ்வாறு இறந்துள்ளனர்.

மாணவிகளின் மூவரினதும் சடலங்கள் நேற்று 15ம் திகதி பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments