விமானப்படை இருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப்படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

திருகோணமலையில் நேற்று 18ம் திகதி  சீனன் குடா விமானப்படை தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  பிரதமர் மஹிந்த  ரஜபக்ஷ  இவ்வாறு தெரிவித்தார்.


(விமானப்படை இருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப்படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.)


மேலும் பிரதமர் மஹிந்த  ரஜபக் உரையாற்றுகையில்.
புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது. இலங்கையின் வட கிழக்கில் குறிப்பாக வன்னியில் புலிகளின் இலக்குகளை அழிப்பதற்கு எமது விமானப்படை பெரிதும் எமக்கு உதவியது.

அதன் மூலமே எமக்கு புலிகள் கைப்பற்றி இருந்த நிலங்களை மீட்க முடிந்ததுடன் மக்களையும் காப்பாற்ற முடிந்தது. கெமரா பொருத்தப்பட்ட விமானங்களின் உளவுத் தகவல் மற்றும் தாக்குதல்கள் மூலம் புலிப்பயங்கரவாதிகளை எங்களால் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது.

உலகில் உள்ள எந்த பயங்கரவாதிகளிடமும் விமானப்படை இருந்ததில்லை இதில் விடுதலைப்புலிகள் அனுபவசாலிகள் சிறிய விமானங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள். அவர்களை எங்களுக்கு தோற்கடிக்க முடிந்தது. இதற்கு விமானப்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது.

அந்த காலங்களில் விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறும்பட்டித் தாக்குதல்கள் என குறிப்பிடுவதுண்டு. அந்த குறும்பட்டித் தாக்குதல்களை புலிகள் இரவு வேளைகளில் கரையோரமாக தாழப்பறந்து வந்து மேற்கொண்டனர்.

அந்தக் குறும்பட்டித் தாக்குதல் மூலம் கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைந்தனர் ஆனால் எமது விமாப்படை அதனை முறையடித்தனர். எங்களுக்கு பெருமை சேர்த்தனர் என்றார்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments