உலகில் வல்லரசு நாடான அமெரிக்கா மத்திய கிழக்கில் போருக்காக எத்தனை அமெரிக்க டொலர் செலவு செய்துள்ளது தெரியுமா?


மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் தலைநகர் பாக்தாதில் ஈரானிய தளபதி குவாசிம் படுகொலைக்கு பின்னர். அமெரிக்காவுடன் லேசான மோதல் போக்கில் ஈராக் இருந்து வருகிறது.


இதர்க்கு அமெரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் போருக்காகவும் இராணுவ தளங்களை பராமரிக்கவும் மட்டும் அமெரிக்கா இதுவரை செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அது மற்றும் இன்று ஈராக் தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்று ஈராக்கிய பாராளுமன்ற பிரேரணைக்கு இதுவரை அமெரிக்கா மதிப்பளிக்கவில்லை.இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் போருக்காக செலவிட்டுள்ள தொகை தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெளியிட்டுள்ளது.


இந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட பின்னர் போருக்காக மட்டும் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் பொதுமக்கள் வரிப்பணத்தில் மொத்தம் 6.4 டிரில்லியன் டொலர்களை ($ 6.4 trillion) அமெரிக்கா செலவிட்டுள்ளது.


கடந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய கிழக்கில் இருந்து படிப்படியாக இராணுவத்தை வெளியேற்றுவோம் என டிரம்ப் ஒப்புதல் கொண்டிருந்தார்.


அதுமற்றும் இன்றி  மத்திய கிழக்கில் இருந்து படிப்படியாக இராணுவத்தை வெளியேற்றுவோம் என டிரம்ப் அரசாங்கம் உறுதி அளித்திருந்தும்,தேர்தலின் பின்பு அது நடக்கவில்லை.

தற்போதைய ஆய்வுகளின்படி மத்திய கிழக்கில் 60,000 முதல் 70,000 அமெரிக்க இராணுவத்தினர் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது மேலும், தற்போதய டிரம்ப் அரசாங்கம் உறுதியான ஒரு முடிவை அறிவிக்க தயக்கம் காட்டுவதால், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.இதில் தட்போது  இராக்கில் அங்குள்ள முக்கிய தளங்களில் சுமார் 6000 அமெரிக்க இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர் என்று அங்குள்ள  தகவல்கள் தெரிவிக்கின்றன.


அது மற்றும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் 200,000 இராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.netPost a Comment

0 Comments