அரச இயந்திரத்தில் காணப்படும் திறன்னின்மை, தாமதம், மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் சகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

இலங்கையில் அரச இயந்திரத்தில் காணப்படும் திறன்னின்மை, தாமதம், மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் சகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் செயலாளர்களுடனான சந்திப்பு நேற்று 17ம் திகதி  ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சேவை பெறுனர் சேவை வழங்குனரிடம் செல்வதற்குப் பதிலாக இணையம் மூலம் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களில் உள்ள சகல தரவுகளும் தொலைத்தொடர்பு மற்றும் தொழினுட்ப நிறுவனத்தின் தலையீட்டின் மூலம் சேகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய மக்களோடு நெருக்கமாக செயற்படும் அனைத்து அரச நிறுவனங்களையும் முதன்மைபடுத்தி அவற்றை வலையமைப்புக்குள் கொண்டு வரப்படவுள்ளன.

இந்த புதிய தொழிநுட்பத்தின் மூலம் இணையத்தை பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் கடவூச்சீட்டு, பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் அத்துடன் காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல சேவைகளை விரைவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு தரவு கட்டமைப்பில் தரவுகளை உள்வாங்குவதன் ஊடாக நேரத்தைக் குறைத்து திறன்யின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றை தடுக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் வரிவிதிப்பு முதல் ஓய்வூதியம் பெறுவது வரையான பலதரப்பட்ட துறைகளில் தான்னியக்க  சேவையை இலகுவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகளின் மூலம் நாட்டை பாதிக்கும் முக்கிய முடிவுகளின் துல்லியமான பகுப்பாய்வை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்மூலம் பொது மக்கள் அரச நிறுவனங்களிடம் இருந்து தமது தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் தாமதங்களைத் தவிர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் 1919 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அரச தகவல் மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தகவல் தொடர்புகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments