இரட்டையர்கள் ஒன்று கூடுதலில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கை உள்ள இரட்டையர்கள் ஈடுபடவுள்ளனர்.


இலங்கையில் முதன் முதலாக  இரட்டையர்கள் ஒன்று கூடுதலில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் நாளை 20ம் திகதி இலங்கை இரட்டையர்கள் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிகழ்வு கொழும்பு சுகததாச அரங்கில் நாளை ஒன்று கூடுமாறு இலங்கை இரட்டையர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை 20ம் திகதி  காலை 9.30am  மணிக்கு இந்த ஒன்றுகூடல் இடம்பெறும் பங்கேற்க விரும்புவோர் தங்கள் தேசிய அடையாள அட்டை, பிரதேச செயலாளர் அல்லது சமாதான நீதிவானின் ஒப்புதலுடன் பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக இரட்டையர் ஒன்று கூடலில் தற்போது தைவான் வசம் உலகசாதனை உள்ளது. தைபே நகர மண்டபத்திற்கு முன்பாக 1999ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி 3,900 இரட்டையர் இணைகள் ஒன்று கூடியிருந்தனர். அதற்கு முன்னதாக 2,900 இணைகள் ஒன்றுகூடியதே சாதனையாக இருந்தது.


நாளை சுகததாச அரங்கில் 5,000 இரட்டையர் இணைகளை நாளை ஒன்று திரட்ட  எதிர்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இரட்டையர்கள் சங்கத்தில் தற்போது, 28,000 இரட்டையர் இணை அங்கம் வகிக்கிறார்கள். எனினும், நிதி நெருக்கடி அனைவரையும் ஒன்று திரட்ட தடையாக உள்ளதாக தெரிவித்தார்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments