புத்தளம் மாவட்டம் நிக்கவெரட்டிய மற்றும் கொட்டவெஹெர பகுதி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொட்டவெஹெர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய காணொளியை அயலவர் ஒருவர் தனது கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் Attack on schoolgirl நடத்தியதாக சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவரும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைபாடு ஒன்றை செய்வதற்காக நிக்கவெரட்டிய மற்றும் கொட்டவெஹெர பொலிஸ் நிலையங்களுக்கு தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் தாய் மற்றும் பாட்டி சென்ற வேளையில் அவர்களின் முறைபாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நிக்கவரெட்டிய - கொட்டவேஹர பிரதேசத்தில், சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் இரண்டு பெண்களும் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தில் At the Magistrate's Court in Nikaweratiya முற்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments