இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது.

இந்தியா மீனவர்கள்  இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேந்ர்த பாரதி, சசிகுமார், மணி, அசோக்குமார் ஆகிய நான்கு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பினருகே நேற்று இரவு தொழில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்த காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்ட சென்றனர்.

இந்நிலையில் இன்று மாலை யாழ் பண்ணையிலுள்ள நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த நான்கு மீனவர்களும் அங்கு பதிவுகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி தமது படகையும் கடலுக்குள் மூழ்கடித்தே தம்மைக் கைது செய்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments