உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதர இன்று காலமானார்.

உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் நேபாளத்தை சேர்ந்த  ககேந்திர தபா. 27 வயதான இவர் 1992ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 cm  சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 kg  கிலோதான்.

கேந்திர தபா இவர் கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு வரை உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை இவர்தான் தக்க வைத்து இருந்தார்.

பிறகு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93cm  சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நேபாளத்தின் ககேந்திர தபா தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார்.


கின்னஸ் சாதனை படைத்ததால் உலகின் சில நாடுகள் அவரை அழைத்து கவுரவித்தன. என்றாலும் நேபாளத்தில் அவர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து ககேந்திர தபா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று 18ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடக்கின்றன.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments