தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது 6 ரீ.எம் வீதியில் கடந்த 9 ஆம் திகதி அதிகாலை பெற்றோல் கலனுடன் திடீரென வீட்டினுள் உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிய பெண்ணை அழைத்து அவர் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ள நிலையில் சம்பவத்தில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  13 அதிகாலை உயிரிழந்தார்.

இதே வேளை குறித்த சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 6 R.M வீதியை சேர்ந்த கலந்தர் லெப்பை கமருன் நிஸா 42  வயது என்ற 7 பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்து பொலிஸாரினால் கைதான சந்தேக நபரான இப்ராஹிம் உதுமாலெப்பை நிசார்  48 வயது என்ற குடும்பஸ்தர் இறந்த பெண்ணின் முன்னாள் கணவராவார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் தம்பதிகள் எனவும் ஒரு வருடத்திற்கு முன்னர் விவாகரத்து செய்த பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை சந்தித்ததுடன் தாபரிப்பு பணம் செலுத்திய விடயம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Kalmunai police division in Sainthamaruthu 6 riem road past the 9 th wee petrol tank with a sudden and indoor permeate person, where the sleeping girl to call upon him with petrol pouring burn at which the incident severe burns leading to the female Kalmunai Ashraf Memorial Hospital's emergency anumatikkapattu 3 resort In the early hours of yesterday, 13, died after receiving treatment for eye conditions.

Meanwhile, the suspect who was admitted to the Kalmunai Northern Reserve Hospital with the protection of the police has been arrested.

Kalmunai police are conducting further inquiries into the incident.

The mother of 7 children, 42-year-old Kamandar Leppa of 6 R.M Road, Sainthamaruthu died in the incident.

Ibrahim Udumaleb, a 48-year-old family member of the family of the deceased, is the husband of the suspect, who was injured and taken by the police.

It is reported that the two victims were divorced a year ago after a divorce.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments