பிரசவ அறைக்கு புகுந்த நாய் குழந்தைக்கு எமனாக மாறியது;

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன்.நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என கூறி உள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கஞ்சனுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என கூறவே ரவிக்குமாரும் சம்மதித்தார். உடனே கஞ்சனை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்து சென்றனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை பிறந்தது.


அதன் பின்னர் கஞ்சனை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். குழந்தை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தது. திடீரென வைத்தியசாலையில் ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கினுள் புகுந்து விட்டதாக சத்தம் போட்டார்.

பின்னர் குழந்தையின் தந்தையானா ரவிக்குமார்  அதிர்ச்சி அடைந்த நிலையில்  உள்ளே ஓடிச்சென்று பார்த்த போது குழந்தை நாய்க்கடி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அப்போது குழந்தையை கடிக்க மீண்டும் நாய் அருகில் வந்தது. உடனே ரவிக்குமார் கூச்சல் போடவும், வைத்தியசாலை ஊழியர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர்.

அங்கு இருந்த  குழந்தையை வைத்தியர்கள் சோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிக்குமார் பொலில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆஸ்பத்திரி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நாய் கடித்த சம்பவம் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வைத்தியர்கள் குழு அமைத்த விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்தியசாலயை இயங்கி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வைத்தியசாலை முற்றாக  மூடிவிடுவதர்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments