நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் இணைந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான இலக்கு ஒன்றை நோக்காக கொண்ட திட்டம் ஒன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

எமது இலங்கை தாய் திறு நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் இணைந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான இலக்கு ஒன்றை நோக்காக கொண்ட திட்டம் ஒன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுற்றுலா மற்றும் விமான சேவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று 13 ம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

விரைவான பொருளாதார அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரே துறை பொருளாதார துறை எனவும் ஆகவே அந்த துறையை மேம்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதை இலக்காக கொண்டு செயற்படுமாறு ஜனாதிபதி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

´இந்த துறையில் அனுபவமும் அர்பணிப்பும் மிகுந்த ஒரு குழு தேவை. அனைத்து பிரிவுகளிலும் துரித நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டுக்காக எடுக்க வேண்டிய முடிவுகளை அச்சமின்றி எடுக்க நான் தயார். அவ்வாறான நன்மைகளை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எடுக்க ஏனைய அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்புகின்றேன். இலக்குடன் பயணித்தால் எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ள முடியும்´ என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையில் உள்ள அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அவற்றை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

விமான நிலையத்திற்கு வெளியிலும் வழங்கப்படும் சலுகைகள் உச்ச அளவில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும் அது குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதற்கும் ஒரு பரந்துப்பட்ட பிரச்சார பொறிமுறையின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு பாரிய ஒரு இலாபத்தை கொண்டு வர முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.President Gotabhaya Rajapaksa has advised tourism and aviation officials to formulate a plan with the objective of promoting tourism in Sri Lanka with foreign ambassadors.
The President made this suggestion during a meeting held at the Presidential Secretariat yesterday.

The economic sector is the only sector capable of rapid economic development, so the President has advised officials to improve the sector and achieve a target of USD 10 million by 2025.

We need a team with a lot of experience and dedication in this field. Accelerate benefits in all sectors. I am ready to make the decisions for the country without fear. I hope that other authorities will be dedicated to take such benefits to the nation and the people. Any challenge can be overcome if you travel with the goal, ”the President said.

The discussion discussed the identified issues in the tourism industry and the measures to be taken to promote them.

The President also pointed out that the benefits offered outside the airport should be at their peak.
The President has also explained the need for a wider propaganda mechanism to promote tourism and increase awareness.

President Gotabhaya Rajapakse said this could bring a huge profit to Sri Lanka.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments